
கங்குவா புதிய போஸ்டர் வெளியீடு
சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் கங்குவா. அவருடன் திஷா பதானி, யோகி பாபு, கோவை சரளா, ஜெகபதிபாபு, ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படம் 350 கோடி பட்ஜெட்டில் , 10 மொழிகளில் தயாராகிறது. இந்த நிலையில் நேற்று தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கங்குவா படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் சூர்யா. அதில் 2024 கோடை விடுமுறையில் கங்குவா திரைக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டில் அல்லது மே துவக்கத்தில் இப்படம் திரைக்கு வரும் என தெரிகிறது.