உடுப்பி, கர்நாடக மாநிலம் உடுப்பியில், கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த 10 மீன்பிடி விசைப்படகுகள் தீ விபத்தில் கருகின.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டம் கங்கொல்லியின், மாகனீஸ் சாலையில் உள்ள கடற்கரையில், 10 மீன்பிடி விசைப்படகுகள் நங்கூரம் போட்டு நிறுத்தப்பட்டிருந்தன.
தீபாவளியை ஒட்டி விசைப்படகுகளை அலங்கரித்து, பூஜை செய்து நிறுத்தி வைத்துஇருந்தனர்.
நேற்று மீன்பிடி தொழிலாளர்கள் பட்டாசு வெடித்தனர். அப்போது தீப்பொறி பட்டதில், ஒரு விசைப்படகில் தீப்பிடித்தது. இது மளமளவென மற்ற விசைப்படகுகளுக்கும் பரவியது. தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனால் அதற்குள் ஏழு விசைப்படகுகள் தீக்கிரையாகின. விசைப்படகுகள் எரிந்ததால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏற்படவில்லை.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement