மும்பை: உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் இன்று இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மும்பை, வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்த இந்தியா, நான்காவது இடம் பெற்ற நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இதில் வெல்லும் அணி நவ. 19ல் ஆமதாபாத்தில் நடக்கவுள்ள பைனலுக்கு செல்லும்.
இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்தை சந்திக்கவுள்ளது. 2019 அரையிறுதியில் இந்தியா தோற்றதால், இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருநாள் உலக கோப்பை அரங்கில் இந்தியா 7 முறை அரையிறுதியில் பங்கேற்றது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement