கொழும்பு,இலங்கையில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், பொதுமக்களிடையே பீதி நிலவியது.
நம் அண்டை நாடான இலங்கையை மையமாக வைத்து, நேற்று நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்திய பெருங்கடலின் தென்பகுதியில், 10 கி.மீ., ஆழத்தில் நேற்று பகல் 12:30 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம், ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென் கிழக்கே, 800 கி.மீ., தொலைவில் நில நடுக்கம் பதிவானதாகவும், இந்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
ஆனாலும், கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் நில நடுக்கத்தின் தாக்கத்தை உணர்ந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
வீடுகளை விட்டு வெளியேறி, திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். நீண்ட நேரத்துக்குப் பின், இயல்பு நிலை திரும்பியது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement