India recommends Canada to prevent attacks on places of worship, address hate speech | வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்துங்க: கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

ஜெனீவா: வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கனடாவுக்கு இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் மதிப்பாய்வு கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா, வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட ஐ.நா உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. அப்போது இந்திய தூதர் முகமது ஹூசைன் பேசியதாவது: கனடாவில் ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பேச்சு சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் இயக்கங்களின் நடவடிக்கைகளை கனடா அரசு கட்டுப்படுத்த வேண்டும். சிறுபான்மையினர் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்களை தடுக்க வேண்டும். வெறுப்பு பேச்சுகள் மற்றும் குற்றங்களை கட்டுப்படுத்தும் வகையில் கனடா அரசு அரசியலமைப்பை பலப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.