திருவனந்தபுரம், கேரளாவின் கண்ணுார் மாவட்ட வனப்பகுதியில், போலீசாருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே நேற்று நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் காயம்அடைந்த நக்சலைட்டுகள் தப்பியோடினர்.
கேரளாவின் குறிப்பிட்ட சில பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
இந்நிலையில், நேற்று கண்ணுார் மாவட்டம், உருப்பும்குட்டி வனப் பகுதியில், அதிரடிப்படை போலீசார், வழக்கமான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள், போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதற்கு பதிலடியாக போலீசாரும் சுட்டனர். இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இதில், நக்சலைட்டுகள் சிலர் காயமடைந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் தப்பியோடினர்.
அங்கு கிடந்த ரத்தக்கறை படிந்த துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். தப்பியோடிய நக்சலைட்டுகளை, போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கண்ணுார் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காயமடைந்த நக்சலைட்டுகள் சிகிச்சை பெற வரலாம் என்ற சந்தேகத்தில், மருத்துவமனைகளிலும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement