Respect For Indias Space Programme Is Off The Charts After Chandrayaan-3: NASA Official Laure Leshin | சந்திரயான் 3 வெற்றிக்கு பிறகு இந்திய மதிப்பு பன்மடங்கு உயர்வு: நாசா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: சந்திரயான்- 3 வெற்றிக்கு பிறகு இந்திய விண்வெளி திட்டத்தின் மதிப்பு பன்மடங்கு உயர்ந்துவிட்டது என நாசா விஞ்ஞானி லாரே லெஷின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாசா விஞ்ஞானி லாரே லெஷின் கூறியிருப்பதாவது: சந்திரயான்-3 திட்டத்தின் வரலாற்று வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான மரியாதை உயர்ந்துள்ளது. சந்திரயான்- 3 வெற்றிக்கு பிறகு இந்திய விண்வெளி திட்டத்தின் மதிப்பு நாசா விஞ்ஞானிகள் மத்தியில் பன்மடங்கு உயர்ந்துவிட்டது.

சந்திரயான்-3 மற்றும் இந்திய விண்வெளி ஆய்வுக்கான எதிர்காலத் திட்டங்களால் நாங்கள் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளோம். நாசா மற்றும் இஸ்ரோ இடையே இன்னும் பல ஒத்துழைப்புகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியாவின் விண்வெளித் திட்டத்திற்கான மரியாதை ஏற்கனவே மிக அதிகமாக இருந்தது. ஏனெனில் இந்தியா நிறைய சாதித்துள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கி வரும் உலகின் மிக விலையுயர்ந்த செயற்கைக்கோளின் ஏவுதல் 2024ம் ஆண்டில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.