வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம் என அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை வர்த்தக சம்மேளன முன்னாள் தலைவர் சந்திரா உள்பட பலர் இலங்கை உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரித்தது. இது தொடர்பாக இன்று (நவ.,14) அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
3 பக்சேக்களும் பொறுப்பு
தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பத்தினர் தான் காரணம். பொருளாதார நெருக்கடிக்கு மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகிய 3 பக்சேக்களும் பொறுப்பு.
3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள் அதிபரின் செயலாளர் ஆகியோர் அடிப்படை உரிமைகளை மீறி உள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தை தவறாக கையாண்டதன் விளைவே பொருளாதார நெருக்கடி ஏற்பட காரணம். இவ்வாறு இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement