How To Change UPI PIN: இன்றைய நவீன யுகத்தில் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் இந்தியாவில் UPI செயலிகளை பயன்படுத்தி தங்களின் அன்றாடம் மூலம் பல பரிவர்த்தனையை மேற்கொள்கின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகள்தான் பெரும்பாலோனரால் பயன்படுத்தப்படுகிறது. நிதி பாதுகாப்பு மற்றும் எளிமையான முறையில் பரிவர்த்தனை மேற்கொள்ள இந்த UPI செயலிகள் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, முன்னர் கூறியதுபோல் நிதி பாதுகாப்பை கருத்தில்கொண்டு UPI பின்நம்பர்களை ஒரு மூன்று மாதம் அல்லது குறைந்தபட்சம் ஆறு மாதம் இடைவெளியில் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது பெரும்பாலானோரின் அறிவுரையாக உள்ளது. மேலும், பாதுகாப்புக்காக கொடுக்கப்படும் பின்நம்பர்களை – 1234, 0000, 1111 – இதுபோன்ற எளிமையாக வைக்காலம், வேறு விதமாக வைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
அந்த வகையில், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளில் பின்நம்பரை மாற்றிக்கொள்வதும் அவசியமாகிறது. இந்நிலையில், இந்த செயலிகளில் எப்படி பின்நம்பரை மாற்றுவது என்றும் அதன் முழு செயல்முறையும் ஒவ்வொன்றாக காணலாம்.
பேடிஎம் செயலியில் பின்நம்பர் மாற்றும் வழி:
– உங்கள் ஸ்மார்ட்போனில் பேடிஎம் செயலிகளை திறக்கவும்.
– செயலியின் மேல் இடதுபுறத்தில் உங்கள் சுயவிவரத்தை (Profile) கிளிக் செய்யவும்.
– உங்கள் கணக்கிற்கான QR குறியீட்டிற்குக் கீழே அமைந்துள்ள ‘Reset UPI PIN’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
– பேமெண்ட் அக்கவுண்ட்ஸின் கீழ் உள்ள வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
– இப்போது, ‘Change’ என்பதைத் கிளிக் செய்யவும்.
– வங்கிக் கணக்குடன் தொடர்புடைய டெபிட்/ஏடிஎம் கார்டு விவரங்கள் மற்றும் மேலும் தொடரவும்
– ஏற்கனவே உள்ள UPI பின்னை உள்ளீடு செய்து, தொடரவும்.
– இப்போது, புதிய UPI பின்னை உள்ளீடு செய்து அதனை மாற்றியமைக்கவும்.
கூகுள் பே செயலியில் பின்நம்பரை மாற்றும் வழி:
– உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் பே செயலியை திறக்கவும்
– மேல் வலது மூலையில் உள்ள உங்கள் சுயவிவரப் புகைப்படத்தை கிளிக் செய்யவும்
– வங்கி கணக்கு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
– வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
– அதில் காணப்படும் மூன்று புள்ளிகளைத் தட்டி Change UPI PIN ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
– Change UPI PIN என்பதைத் தட்டி உங்களின் தற்போதைய UPI எண்ணை உள்ளிடவும். பின்னர் தொடரவும்
– இப்போது, புதிய UPI பின்னை உள்ளிடவும்
– அதை மீண்டும் உள்ளிட்டு தொடர்ந்து அமைக்கவும்
போன்பே செயலியில் பின்நம்பரை மாற்றும் வழி:
– உங்கள் Android அல்லது iOS சாதனத்தில் போன்பே செயலியை திறக்கவும்
– முகப்புத் திரையில் உங்கள் சுயவிவரப் படத்தைக் கிளிக் செய்யவும்
– கீழே ஸ்க்ரோல் செய்து Payments Method பிரிவைத் தேடுங்கள்
– அதில் வங்கிக் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்
– தொடர்ந்து, Reset UPI PIN ஆப்ஷனை கிளிக் செய்யவும்
– வங்கிக் கணக்குடன் தொடர்புடைய டெபிட்/ஏடிஎம் கார்டு விவரங்களை உள்ளிட்டு மேலும் தொடரவும்
– அதில், OTP-ஐ உள்ளிடவும்
– ஏற்கனவே உள்ள UPI பின்னை உள்ளிட்டு தொடரவும்
– புதிய UPI பின்னை மீண்டும் உள்ளிட்டு அதை அமைப்பதை உறுதிப்படுத்தவும்