இந்திய அணியின் ரன்மெஷின் விராட் கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் மீண்டுமொரு சதத்தை விளாசி அமர்களப்படுத்தினார். ரோகித் சர்மா அவுட்டான பிறகு களம் புகுந்த விராட் கோலி முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மெல்ல மெல்ல பேட்டிங்கில் கியரை உயர்த்திய விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் 50வது சதமடித்து சரித்திர சாதனை படைத்தார். இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 49 சதங்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அவர் 453 இன்னிங்ஸில் அடித்த சதங்களை வெறும் 279வது இன்னிங்ஸிலேயே முறியடித்தார் விராட் கோலி.
November 15, 2023
அவர் சதமடித்தவுடன் கேலரியில் இருந்த சச்சின் டெண்டுல்கருக்கு தலை வணங்கினார். சச்சினும் விராட் கோலியின் சதத்தை கேலரியில் இருந்தவாறே கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதனையடுத்து கேலரியில் இருந்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா ஆனந்தத்தில் துள்ளிக் குதித்தார். கணவரின் 50வது சதத்தைக் கொண்டாடிய அனுஷ்கா கேலரியில் இருந்தவாறே பிளையிங் கிஸ் கொடுத்தார்.
November 15, 2023
ஒட்டுமொத்த மைதானமும் விராட் கோலியின் ஆட்டத்தை கொண்டாடியது. அரையிறுதிப் போட்டியை நேரில் பார்க்க வந்திருந்த விவியன் ரிச்சர்ட்ஸ், டேவிட் பெக்காம், சுனில் கவாஸ்கர், ஹர்திக் பாண்டியா உள்ளிட்டோரும் விராட் கோலியை வாழ்த்தினர். சதமடித்தவுடன் விராட் கோலி தன்னுடைய பேட்டிங் கியரை அடுத்த லெவலுக்கு உயர்த்தினார். உடனே பவுண்டரி அடித்த விராட் கோலி இறுதியாக 117 ரன்களில் வெளியேறினார். 113 பந்துகளை சந்தித்து, இதில் 9 பவுண்டரி இரண்டு சிக்சரும் விளாசினார். அவர் அவுட்டாகி வெளியே செல்லும்போது ஒட்டுமொத்த மைதானமுமே எழுந்து நின்று கைத்தட்டி வழியனுப்பி வைத்தனர்.
November 15, 2023
இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 95 ரன்களில் இருக்கும்போது காலில் கிராம்ப் வந்தது. அவருக்கு முன்னர் ஏற்கனவே கில் கிராம்பில் வெளியேறிய நிலையில், விராட் கோலி தொடர்ந்து விளையாட முடிவெடுத்தார். அதில் ஒரு வரலாற்றையும் படைத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினார். அவருக்கு கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.