Pakistan in financial crisis: Arms sales to Ukraine exposed | நிதி நெருக்கடியில் பாக்.,: உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்றது அம்பலம்

இஸ்லாமாபாத் : கடும் நிதி நெருக்கடியில் தத்தளித்த பாகிஸ்தான் உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்றது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் 364 மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. தாக்குதலை உக்ரைன் சமாளித்து வருகிறது.அந்நாட்டிற்கு அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றன. சில மாதங்களாக பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. உலக வங்கி ஐ.எம்.எப். உள்ளிட்ட சர்வதேச நிதி அமைப்புகளிடம் உதவி கோரியுள்ளது. பல நாடுகளின் உதவியையும் எதிர்பார்த்துள்ளது. இதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விடுக்கும் அழுத்தத்திற்கு இசைந்து வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவின் நெருக்கடிக்கு பணிந்து போர்த் தளவாடங்களை உக்ரைனுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து விற்பனை செய்ததாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டது. இச்செய்தியை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்தது.

ஆனால் பாகிஸ்தானின் கூறிய பொய் தற்போது அம்பலம் ஆகியுள்ளது. உக்ரைனுக்கு இதுவரை 364 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஆயுத தளவாடங்களை பாகிஸ்தான் விற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக வெளியான தகவலில் கூறப்படுவதாவது: அமெரிக்காவின் தரவுகளின்படி ஆயுதங்கள் விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கடந்தாண்டு ஆகஸ்ட் பாகிஸ்தான் அரசு கையெழுத்து போட்டது. முதல் ஒப்பந்தம் 232 மில்லியன் அமெரிக்க டாலர் மற்றும் 2வது ஒப்பந்தம் 132 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த ஒப்பந்தம் கடந்த அக். மாதத்துடன் முடிவுக்கு வந்தது.

அமெரிக்காவில் உள்ள குளோபல் மிலிட்டரி நிறுவனத்துடனும் நார்த்ராப் குரும்மன் நிறுவனத்துடனும் கையெழுத்தானது.

பிரிட்டஷ் ராணுவத்திற்கு சொந்தமான சரக்கு விமானம் மூலம் ஆயுத தளவாடங்கள் சப்ளை செய்யப்பட்டது. இதற்காக பிரிட்டிஷ் விமானம் ராவல்பிண்டி விமான நிலையத்திற்கு 5 முறை வந்து சென்றது. ராவல்பிண்டியில் இருந்து ஆயுத தளவாடங்களுடன் சைப்ரஸ் சென்ற விமானம் பிறகு ருமேனியா சென்றது. ருமேனியா அருகில் தான் உக்ரைன் உள்ளது. பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியானது 2022 — 23 நிதியாண்டில் பாகிஸ்தான் ஆயுத விற்பனை அதிகரித்துள்ளதாக கூறியிருந்தது என கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.