மும்பை: சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய் உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமானார்.
சஹாரா குழும தலைவர் சுப்ரதா ராய், 75 விதிகளை மீறி, ரூ. 24 ஆயிரம் கோடி வரை முதலீடுகளை திரட்டிய வழக்கில் 2014-ம் ஆண்டு கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற அனுமதியுடன் பரோலில் வெளியே வந்தார். கடந்த12-ம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சஹாரா குழும நிர்வாகம் அறிக்கை
வெளியிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement