Tamil Nadu fisherman jailed for 2 years in Sri Lanka | இலங்கையில் தமிழக மீனவருக்கு 2 ஆண்டுகள் சிறை

கொழும்பு: கடந்த அக்.,16 மற்றும் 18ம் தேதிகளில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 22 தமிழக மீனவர்களில் 21 பேரை இலங்கை நீதிமன்றம் இன்று(நவ.,15) விடுவித்தது.

2 ஆண்டுகள் சிறை

இரண்டாவது முறையாக சிறைபிடிக்கப்பட்ட மீனவர் முருகனுக்கு மட்டும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையை இலங்கை நீதிமன்றம் வழங்கி உள்ளது. விடுவிக்கப்பட்ட 21 ராமேஸ்வர மீனவர்கள் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.