சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்!

சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 75. நீரிழிவு , ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருந்த சுப்ரதா ராய் சகாரா சிட்பண்ட் மோசடியில் கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் தற்போது ஜாமீனில் இருக்கிறார். மறைந்த சுப்ரதா ராயிக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகன்கள் இரண்டு பேரும் வெளிநாட்டில் இருக்கின்றனர்.