வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி, தங்களுடைய நாட்டின் எல்லை பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், நம் அண்டை நாடான மியான்மரைச் சேர்ந்த, 39 ராணுவ அதிகாரிகள் உட்பட, 5,000க்கும் மேற்பட்டோர், எல்லையைக் கடந்து, மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்து உள்ளனர்.
நம் அண்டை நாடான மியான்மரில், 2021ல் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, அங்கு ராணுவத்துக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. ராணுவத்துக்கு எதிரான குழுக்களுக்கும், ராணுவத்துக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல்கள் நடந்து வருகின்றன.
குறிப்பாக, மிசோரமை ஒட்டியுள்ள, மியான்மரின் சின் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதில் சில இடங்களை ராணுவத்துக்கு எதிரான குழுக்கள் கைப்பற்றியுள்ளன.
![]() |
இரு தரப்புக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், மியான்மரின் எல்லை பகுதி கிராமங்களைச் சேர்ந்த மக்கள், எல்லையை கடந்து, மிசோரம் மாநிலத்தில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களில் மட்டும், 39 ராணுவ அதிகாரிகள் உட்பட 5,000 பேர் மிசோரமின் ஜோகாவ்தரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்படி, இவர்கள், அசாம் ரைபிள்ஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 39 மியான்மர் ராணுவ அதிகாரிகள், நம் விமானப் படை விமானம் வாயிலாக மியான்மருக்கு நேற்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
