சென்னை: தமிழ்நாடுஅரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்க மறுப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை ஆளுநர் ரவி, தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். தமிழ்நாட்டில் ஆட்சி செய்து வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். கருத்தியல் மோதலாக தொடர்ந்தர இந்த மோதல், தற்போது, தனிப்பட்ட […]
