உள்ளூராட்சி அமைப்புகளில் பணிபுரியும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் – பிரதமர்

உள்ளூராட்சி நிறுவனங்களில் கடமையாற்றும் நிரந்தரமற்ற சிற்றூழியர்களை தமது சேவையில் நிரந்தரமாக்கும் கொள்கை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு திறைசேரியுடன் கலந்துரையாடி வருவதாகவும் பிரதமர், பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருருமான தினேஷ் குனவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இன்று (16) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

8 ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரியும் சுமார் 13,000 சிற்றூழியர்கள் இருக்கின்றனர், அவர்களுக்கு தற்போது சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைப்புகள் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது. எனவே இந்த தொழிலாளர்களை தமது தொழிழில் நிரந்தரமாக்குவதனால் அரசாங்கத்திற்கு பணம் செலவழிக்க வேண்டியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக பிரதமர் மேலும் உரையாற்றுகையில்…

‘இந்தக் கேள்விக்கு முன்பே பதில் கூறப்பட்டது. தற்போது, இந்த விடயம் குறித்து ஆராய்ந்து, இந்த ஊழியர்களை நிரந்தரமாக்க திறைசேரியுடன்; ஆலோசித்து வருகிறோம், ஏனெனில் உள்ளூராட்சி அமைப்புகளினால் முடியுமான மற்றும் முடியாத விடயங்களன் உள்ளன. எனவே, இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு கொள்கை ரீதியிலான தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தேவையான பிற நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.’ என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.