
நவ.17ல் வெளியாகும் பார்கிங் பட டிரைலர்
புதுமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பார்கிங்'. சோல்டர்ஸ் பிலிம் பேக்டரி மற்றும் பெசன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். இப்படம் வருகின்ற டிசம்பர் 1ந் தேதி அன்று வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வருகின்ற நவம்பர் 17ம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என ப்ரோமொ வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.