ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தின் ஆளுங்கட்சியான காங்கிரஸ் ஆட்சியைத் தக்க வைக்கத் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது. இதையொட்டி பல்வேறு புதிய வாக்குறுதிகளை வழங்கி பிரசாரம் மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காகக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று ராஜஸ்தான் வந்தார். அவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். […]
