சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், வரும் 18ந்தேதி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை கூட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசு தரப்பில், ஆளுநர்மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களை விளக்கம் கேட்டு ஆளுநர் தமிழ்நாடு அரசுக்கு திருப்பி உள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள பெரும்பாலான மசோதாக்கள் பல்கலைக்கழகங்கள் தொடர்புடையவை என தகவல்கள் தெரிவிக்கின்றன.இது சர்ச்சையாகி உள்ளது. […]
