வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரை காண இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தொழிலதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினரை சந்தித்து பேசினார்.
இங்கிலாந்து கால்பந்து அணி முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் ‘யுனிசெப்’ அமைப்பின் நல்லெண்ண துாதராக உள்ளார். இதையடுத்து நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டியை பார்வையிட்டார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினை சந்தித்து பேசினார். பின்னர் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய வீரர்களை சந்தித்தார். ரோஹித் சர்மா அணிந்திருந்த டிசர்ட்டை வாங்கி தான் அணிந்திருந்த டிசர்ட்டை ரோஹித் சர்மாவுக்கு வழங்கினார்.
இருவரும் டிசார்ட் மாற்றிக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவியது.
இதையடுத்து மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு சென்ற டேவிட் பெக்காம் அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார். குடும்பத்துடன் குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement