Show date, time on food package: High Court order after girl died eating shawarma | உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி, நேரம்: ‛ஷவர்மா இறப்பு வழக்கில் கேரள ஐகோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

திருவனந்தபுரம்: ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்த வழக்கில், உணவு பொட்டலங்களில் தயாரிப்பு தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கேரளாவில் கடந்த ஆண்டு ‛ஷவர்மா’ சாப்பிட்ட 16 வயதுடைய இளம்பெண், திடீரென உயிரிழந்தார். கெட்டுப்போன பொருட்களால் ஷவர்மா தயாரித்ததால் தனது மகள் இறந்ததாக இறந்த பெண்ணின் தாயார் கேரளா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் அமர்வில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

இந்த நிலையில், நீதிபதி தேவன் ராமச்சந்திரன், ‛உணவு பொட்டலங்களில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட வேண்டும் என்றும், இதற்கான விழிப்புணர்வை அனைத்து உணவகங்களுக்கும் ஏற்படுத்த வேண்டும்’ என உத்தரவிட்டார்.

மேலும், உணவு பாதுகாப்பு ஆணையர் அதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், இந்த வழிகாட்டுதல்களை மீறும் உணவகங்கள் தேவையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.