வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோல்கட்டா: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது.
உலக கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி பைனலுக்கு முன்னேறிவிட்டது.
இன்று துவங்கிய இரண்டாவது அரையிறுதியில் தென்ஆப்ரிக்கா -ஆஸ்திரேலியா அணிகள் மோதின. கோல்கட்டாவின் ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் முதலில் ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு துவக்கத்திலேயே ‘வேகங்கள்’ நெருக்கடி தந்தனர். ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் கேப்டன் பவுமா டக் அவுட்டானார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ குயின்டன் (3) சிக்கினார். துசென் (6), மார்க்ரம் (10) விரைவில் திரும்பினர். 14 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 44 ரன் எடுத்திருந்தபோது மழை வர ஆட்டம் நிறுத்தப்பட்டது. 40 நிமிடத்திற்குப்பின், மீண்டும் ஆட்டம் துவங்கியது.
கிளாசன், மில்லர் பொறுப்புடன் விளையாடினர். இந்த நேரத்தில் ஹெட் அசத்தினார். இவரது ‘சுழலில்’ கிளாசன் (47), ஜான்சென் (0) அடுத்தடுத்து சிக்கினர். மில்லர் (101) சதம் விளாசினார். தென் ஆப்ரிக்கா 49.4 ஓவரில் 212 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், ஸ்டார்க் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
213 ரன்கள் வெற்றி இலக்காக களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி பைனலுக்கு தகுதி பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக டிரவிஸ் ஹெட்48 பந்துகளில் 62 ரன்களும், ஜோஸ் இன்ங்கிலிஷ் 28 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி ஆஸ்திரேலியா பைனலுக்குள் நுழைந்தது. வரும்
19-ம் தேதி இந்தியாவை எதிர்கொள்கிறது.எட்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 5 முறை உலக கோப்பையை வென்றுள்ளது. 20 வருடங்களுக் பின்னர் வரும் 19 ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது. ஆஸ்திரேலிய அணி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement