NPCI new guideline: Your UPI IDs will be deactivated soon if you havent done this; know all details here | பயன்படுத்தாத யு.பி.ஐ.,க்கு ஆபத்து: டிச.,31 கடைசி தேதியாம்..: என்.பி.சி.ஐ வழிகாட்டுதல் வெளியீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஓராண்டுக்கு மேலாக பயன்படுத்தாத யுபிஐ ஐடிகளை டிச.,31க்கு பின் செயலிழக்க செய்யும் வழிகாட்டுதல்களை என்.பி.சி.ஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் டிஜிட்டல் பண பரிமாற்றத்திற்கு ஜி பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் பேமன்ட் சேவைகள் பயன்படுகின்றன. இந்த சேவைகள் யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (யு.பி.ஐ) கீழ் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் வங்கி கணக்குடன் தொடர்புடைய யு.பி.ஐ மூலமாக டிஜிட்டல் முறையில் பணத்தை பரிமாற்றி கொள்ளலாம். இந்த நிலையில், ஓராண்டுக்கு மேலாக பரிவர்த்தனை செய்யாத யுபிஐ.,கள் டிச.,31க்கு பிறகு செயலிழந்து விடும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

நமது யுபிஐ ஐடிகளை செயலிழக்கச் செய்யும் புதிய வழிகாட்டுதல்களை என்பிசிஐ (நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா) அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து வங்கிகளும், ஜி பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளும் ஒரு வருடத்திற்கு மேலாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படவில்லை என்றால், யுபிஐ ஐடிகள் டிசம்பர் 31ம் தேதிக்கு பின் தடை செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிமுறைகள் காரணமாக தவறான நபரின் கணக்கில் பணம். மாற்றப்படுவது தடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.