புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தரவுப் பகுப்பாய்வுப் பிரிவின் தலைவராக இருப்பவர் பிரவீன் சக்ரவர்த்தி. இவரை அகில இந்திய தொழில் வல்லுநர்கள் (ஏஐபிசி) காங்கிரஸ் தலைவராக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நியமித்துள்ளார். இதற்கு முன் இப்பதவியில் சசி தரூர் இருந்தார்.
தனது நியமனம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி கூறுகையில், “காங்கிரஸில் உறுப்பினர்களாக இருந்த பல சிறந்த தொழில் வல்லுநர்கள் நாடு சுதந்திரம் பெறுவதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளனர். ஏஐபிசி.யை வலிமையான குழுவாக மாற்றுவதற்கான நேரம் இது. ஏஐபிசியின் தவைராக சசி தரூரின் பங்களிப்பு ஈடுசெய்ய முடியாதது. இந்தப் பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காக ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.