சென்னை: முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என பேரவையில் ஆளுநர் மீதான தனி தீர்மானத்தின்மீது பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் கூறினார். பின்னர் இதற்கு முதலமைச்சர் மற்றும் பதில் கூறிய நிலையில், பாஜக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாக்களில் 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்என் ரவி திருப்பி அனுப்பிய விவகாரம் சர்ச்சையை எற்படுத்தியது, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு சட்டபேரவை சிறப்பு கூட்டம் […]
