A young couple engaged in a chat in the Bengaluru-Nagarkovil train | பெங்களூரு – நாகர்கோவில் ரயிலில் சல்லாபத்தில் ஈடுபட்ட இளம் ஜோடி

பெங்களூரு : பெங்களூரு – நாகர்கோவில் ரயிலில் கட்டிப்பிடித்து முத்த மழை பொழிந்து, இளம் ஜோடி சல்லாபத்தில் ஈடுபட்டது். அவர்களை சக பயணியர் கண்டித்தனர்.

பெங்களூரு சர் எம்.விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து, தமிழகத்தின் நாகர்கோவிலுக்கு தினமும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்: 17235 இயக்கப்படுகிறது. தினமும் மாலை 5:15 மணிக்கு, பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில், மறுநாள் காலை 7:30 மணிக்கு நாகர்கோவில் சென்றடைகிறது.

நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல, பெங்களூரில் இருந்து ரயில் புறப்பட்டது. ‘எஸ் 1’ பெட்டியில் 25 வயது இளம்பெண், வாலிபர் மேலடுக்கு படுக்கையில் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை 5:40 மணிக்கு திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு, ரயில் சென்றடைந்தது. அந்த பெட்டியில் பயணித்த பெரும்பாலான பயணியர், இறங்கி விட்டனர்.

இதையடுத்து இளம்பெண்ணும், வாலிபரும் மேலடுக்கு படுக்கையில் இருந்து கீழே இறங்கினர். பயணியர் இல்லாத இருக்கைக்கு சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் இருவரும் கட்டிப்பிடித்து மாறி, மாறி முத்த மழை பொழிந்து, சல்லாபத்தில் ஈடுபட்டனர்.

இதை பார்த்த சில பயணியர், அதிர்ச்சி அடைந்தனர். ‘ரயிலில் இப்படிப்பட்ட காரியத்தை செய்யலாமா’ என்று, இளம் ஜோடியை கண்டித்தனர். இதனால், இருவரும் தங்களது முகத்தை கைகளால் மறைத்து கொண்டனர்.

இதற்கிடையில் ரயில், நாகர்கோவில் நிலையத்தை வந்தடைந்தது. ரயில் நின்றதும் இருவரும் அவசர, அவசரமாக இறக்கி அங்கிருந்து ஓட்டமும், நடையுமாக சென்றனர். அவர்கள் இருவரும் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்றும், பெங்களூரில் ஐ.டி., நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் என்றும் தெரிந்தது.

ரயில் பயணத்தில் இளம் ஜோடிகள் அத்துமீறுவது சகஜமாகி விட்டதாகவும், இதனால் குடும்பத்துடன் செல்வோருக்கு தர்மசங்கடம் ஏற்படுவதாகவும் பயணியர் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

‘இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பயணியர் கோரியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.