உலக கோப்பை: 6வது முறையாக மகுடம் சூடிய ஆஸ்திரேலியா – இந்தியாவின் கனவு தகர்ந்தது

உலக்கோப்பை 2023 தொடரில் அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இப்போட்டியில் டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 66 ரன்களும், விராட் கோலி 54 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் அவுட்டானார். ஆஸ்திரேலிய அணியின் கட்டுகோப்பான பந்துவீச்சு மற்றும் சூப்பரான பீல்டிங் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் 47 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அபாய கட்டத்தில் தான் இருந்தது. ஆனால்,  டிராவிஸ் ஹெட், லபுசேன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து நங்கூரம்போல் நிலைத்து நின்றுவிட்டனர். விக்கெட் எடுக்க ரோகித் சர்மா எடுத்த எந்த வியூகமும் கைகொடுக்கவில்லை. ஸ்மித் அவுட் இந்திய அணிக்கு லக்கியாக கிடைத்தாலும், லபுசேன் எல்பிடபள்யூ  அதனை சமன் செய்தது.  அதாவது ஸ்மித்துக்கு எல்டபள்யூவே இல்லை.  அதனை அம்பயர் அவுட் கொடுக்க, ஸ்மித் டிஆர்எஸ் செய்யாமல் வெளியேறினார்.  

லபுசேன் விக்கெட்டை அம்ப்யர் அவுட் இல்லை என சொல்ல, இந்திய அணியின் ரிவ்யூவில் அது அம்ப்யர்ஸ் கால் என வந்தது. ஒருவேளை அப்போது இந்திய அணிக்கு விக்கெட் கிடைத்திருந்தால் அது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கும். இறுதிவரை களத்தில் இருந்த ஹெட்120 ந்துகள் விளையாடி  137 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவரின் ஆட்டம்தான் இந்தியாவின் உலக கோப்பை கனவை கனவாகவே ஆக்கியது. இருப்பினும் அவர் அவுட்டானதும் இந்திய அணி வீரர்கள் டிராவிஸ் ஹெட்டுக்கு கைகொடுத்து பாராட்டினர்.

43 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்து 6வது முறையாக சாம்பியன் ஆனது. இந்திய அணிக்கு உலக கோப்பை மீண்டும் ஒருமுறை கனவானது. ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதும் முகமது சிராஜ் உள்ளிட்டோர் மைதானத்திலேயே கண்கலங்கினர். அக்டோபர் 15ஆம் தேதி உலக கோப்பை புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா நவம்பர் 19 ஆம் தேதி கிரிக்கெட் போட்டியின் உலக சாம்பியனாக ஆனது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை எம்எஸ் தோனியின் தலைமையில் வெற்றி பெற்றிருந்தது. 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.