த்ரிஷா கிட்ட 'கட்' பண்ணி காட்டியிருக்காங்க : மன்சூரலிகான் பதில்

விஜய் நடித்து வெளிவந்த 'லியோ' படத்தில் நடித்தது பற்றிய ஒரு விஷயத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் நடிகர் மன்சூரலிகான். அப்போது படத்தின் கதாநாயகி பற்றியும் ஆபாசமாகப் பேசியிருந்தார். அந்த பேச்சு குறித்து தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தார் த்ரிஷா. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட மற்ற சினிமா பிரபலங்களும் மன்சூரலிகானுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் த்ரிஷாவின் கண்டனம் குறித்து நடிகர் மன்சூரலிகான் விளக்கம் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “'அய்யா' பெரியோர்களே. திடீர்னு திரிஷாவை நான் தப்பா பேசிட்டேன்னு என் பொண்ணு பசங்க, வந்த செய்திகள அனுப்பிச்சாங்க. அடப்பாவிகளா, என் படம் ரிலீஸ் ஆகுற நேரத்துல. நான் வர்ர தேர்தல்ல ஒரு பிரபல கட்சி சார்பா போட்டியிடறேன்னு சொன்ன வேளையில வேண்டும்னே நல்லா எவனோ கொம்பு சீவிவிட்டுருக்கானுக.

உண்மையில அந்த பொண்ண உயர்வாத்தான் சொல்லியிருப்பேன். அனுமாரு சிரஜ்சீவி மலைய கையிலேயே தாங்கிட்டு போன மாதிரி காஷ்மீர் கூட்டிட்டு போயிட்டு வானத்துலேயே திருப்பி கொண்டு வந்துட்டாங்க. பழைய படங்கள் மாதிரி கதாநாயகிகள் கூட நடிக்க வாய்ப்பு இதுல இல்ல. ஆதங்கத்த காமெடியா சொல்லிருப்பேன். அத கட் பண்ணி போட்டு கலகம் பண்ண நெனச்சா… நான் என்ன இந்த சலசலப்புகளுக்கு என்ன அஞ்சரவனா.

திரிஷாட்ட தப்பா வீடியோவ காட்டிருக்காங்க. அய்யா என்கூட நடிச்சவங்கள்ளாம் MLA. M.P. மந்திரின்னு ஆயிட்டாங்க. பல கதாநாயகிகள், பெரிய தொழில் அதிபர்கள கட்டிட்டு செட்டில் ஆகிட்டாங்க. மேலும். லியோ பூஜையிலேயே என் பொண்ணு தில் ரூபா உங்களோட பெரிய FAN-ணுன்னு சொன்னேன். இன்னும் 2 பொண்ணுகளுக்கு கல்யாணம் பண்ணனும். 360 படங்கள்ல நடிச்சிட்டேன். நான் எப்பவும் சக நடிகைகளுக்கு ரொம்ப மரியாத குடுக்கறவன் எல்லாருக்கும் தெரியும். சில சொம்பு தூக்கிகளோட பருப்பெல்லாம் என்ட்ட வேகாது. திரிஷாட்ட தப்பா கட் பண்ணி காமிச்சு கோபப்பட வச்சுருக்காங்கண்ணு தெரியுது. உலகத்துல எத்தனையோ பிரச்சின இருக்கு… பொழப்ப பாருங்கப்பா….நன்றி,” எனக் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.