டில்லி இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா, ஆந்திர மாநிலங்களுக்குச் செல்கிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை முதல் ஒடிசா மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு அலுவலக ரீதியாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவர் பங்கேற்கும் நிகழ்வுகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களின் வெளியாகி உள்ளது நாளை ஒடிசாவின் பாரிபடாவில் நடைபெறும் அகில இந்திய சந்தாலி எழுத்தாளர் சங்கத்தின் 36-வது ஆண்டு மாநாடு மற்றும் இலக்கிய விழாவின் தொடக்க நிகழ்வில் குடியரசு தலைவர் கலந்து கொள்கிறார். […]
