Cricket final special arrangement in pubs | கிரிக்கெட் இறுதிப் போட்டி மதுக்கூடங்களில் சிறப்பு ஏற்பாடு

புதுடில்லி, : உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியை முன்னிட்டு, டில்லி மதுக்கூடங்கள் மற்றும் உணவகங்களில் பெரிய திரை ‘டிவி’ உள்ளிட்ட சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு உணவுகள் மற்றும் பானங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் நகரில் இன்று நடக்கிறது.

இந்தியா – ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மோதும் இந்தப் போட்டியை முன்னிட்டு, டில்லியில் மதுக்கூடங்கள் மற்றும் உணவகங்களும் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

பெரிய திரை ‘டிவி’, சிறப்பு உணவுகள், பானங்கள் மற்றும் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சில மதுக்கூடங்களில் ஒரு நபருக்கு 3,000 ரூபாய் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதாரண நாட்களில் இதுபோன்ற கட்டணம் கிடையாது.

கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள சிறப்பு வசதிகளுக்காக இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

இந்தக் கட்டணத்துக்கு சிறப்பு மதுவகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.