வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஆமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான உலககோப்பை கிரிக்கெட் பைனலில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 6 வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
![]() |
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை பைனலில் இந்திய அணி 240 ரன் எடுத்தது. கோலி, ராகுல் அரை சதம் கடந்தனர்.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் நடந்தது. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் பெரிய மோடி மைதானத்தில் நடந்த பைனலில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இரு ‘லெவன்’ அணிகளில் மாற்றம் செய்யப்படவில்லை. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
![]() |
இந்திய அணிக்கு சுப்மன் கில் (4) ஏமாற்றினார். கேப்டன் ரோகித் சர்மா 31 பந்தில் 47 ரன் எடுத்தார். ஸ்ரேயாஸ் ஐயர் (4) சோபிக்கவில்லை. கோலி (54) அரை சதம் கடந்தார். ராகுல் 66 ரன்னில் ஆட்டமிழந்தார். பின், பவுலர்கள் நெருக்கடி தர ஜடேஜா (9), சூர்யகுமார் (18) தடுமாறினர். இந்திய அணி 50 ஓவரில் 240 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட் கைப்பற்றினார்.
241 ரன் என்ற இலக்குடன் அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 241 ரன் சேர்த்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் உலககோப்பை தொடரில் 6 வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 137 ரன் எடுத்தார். லபுஷேன் ஆட்டமிழக்காமல் 58 ரன் சேர்த்தார். இருவரும் அணியின் வெற்றிக்கு உதவினர். இந்திய பவுலர்கள் பந்து வீச்சு பலன் அளிக்கவில்லை.
ஆஸி., அணிக்கு ரூ.33கோடி: இந்திய அணிக்கு ரூ.16 கோடி
சாம்பியன் பட்டம் வென்ற ஆஸி., அணிக்கு பரிசுதொைகையாக ரூ.33 கோடி வழங்கப்படுகிறது. இரண்டாம் இடம் பெற்ற இந்திய அணிக்கு ரூ.16 கோடி வழங்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement