சிவன் ஷெட்டி கார்டன், : சிவன் ஷெட்டி கார்டன் சபரி அய்யப்பன் பஜனை சபாவில் வரும் 23ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
சிவன் ஷெட்டி கார்டனில் ஸ்ரீசங்கர நாராயண சபா அமைந்துள்ளது. 110 ஆண்டுகள் பழமையானது. இதை புதுப்பிக்க சபாவை சேர்ந்தவர்கள் முடிவு செய்தனர். புதிய கோபுரவாசல் கலசத்துடன் கூடிய மண்டபம் கட்டப்பட்டது.
இதற்கு ‘சபரி அய்யப்பன் பஜனை சபா’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள கோபுர வாசல் மண்டபத்திற்கும், ஸ்ரீவிநாயகர் முதலான பரிவாரங்களுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஹரிஹர புத்திர மஹா சாஸ்தாவுக்கு வரும் 23ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.
அன்று காலையில் மஹா கணபதி பூஜை, அனுக்ஞா, மஹா சங்கல்பம்; மஹா கணபதி, சுப்பிரமணியர், மஹா சாஸ்தா மூல மந்திர ஹோமங்கள், சுதர்சன, மஹாலட்சுமி, வாஸ்து, நவக்கிரஹ ஹோமங்கள்;
மஹா அபிஷேகம்; மஹா பூர்ணாஹூதி, கிரஹப்ரீதி, கலசங்கள் புறப்பாடு;
புதிய கோபுர மண்டபம், மூல மூர்த்திகளுக்கு மஹா கும்பாபிஷேகம்; மஹா மங்காளரத்தி, தீர்த்த பிரசாதம்; பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கல், இரவில் பஜனை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வினியோகிக்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement