கோட்டயம், மலையாள திரைப்பட நடிகர் வினோத் தாமசின் உடல் உயிரிழந்த நிலையில், கார் ஒன்றில் இருந்து நேற்று மீட்கப்பட்டது.
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் வினோத் தாமஸ், 45. மதுப்பழக்கத்துக்கு அடிமையான இவர், நேற்று காலை கோட்டயத்தில் உள்ள மதுபான விடுதிக்கு சென்றுள்ளார்.
அளவுக்கு அதிகமாக மது குடித்த நிலையில் வீட்டிற்கு திரும்ப எண்ணிய அவர், தன் காரில் ஏறியதும் மயங்கி விழுந்துள்ளார்.
மதுபான விடுதியில் நீண்ட நேரமாக நின்ற காரில், ஒருவர் இருப்பது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, விரைந்து வந்த போலீசார், வினோத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த வினோத் தாமஸ் அய்யப்பனும் கோஷியும், நாதொலி ஒரு சிறிய மீனல்ல உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement