உடல் எடையை குறைக்க நினைப்பவரா நீங்கள்… இந்த உடற்பயிற்சி உபகரணங்கள் உதவியாக இருக்கும்!

Fitness Gadgets: தற்போது ஃபிட்னஸ் என்பது அனைவரும் அதிக கவனம் செலுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவுமுறை, சீரற்ற வாழ்க்கை முறை போன்றவற்றால் அதிக உடல் எடை பெறுவது, அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுவது என பல உடல் சார்ந்த பிரச்னைகளும் அதிகமாகிவிட்டன. இதனால், மக்கள் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். 

இருப்பினும் சிலருக்கு தனியே உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல வாய்ப்பில்லாததால் வீட்டிலேயே உடற்பயிற்சி உபகரணங்களை வைத்து பயிற்சி மேற்கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி வல்லுநர்கள், உடற்பயிற்சியில் ஆர்வமாக உள்ளவர்கள் பயிற்சி சார்ந்த உபகரணங்களை வாங்குவதிலும் ஆர்வம் செலுத்துவார்கள். 

அந்த வகையில், தொடக்க நிலையில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள நினைப்போர் தங்களின் பயிற்சிகளை மேற்கொள்ள சில விஷயங்கள் தடையாக இருக்கும். குறிப்பாக, சரியான மனநிலை மற்றும் சில அத்தியாவசிய சாதனங்கள் மூலம் உடற்பயிற்சி வழக்கத்தை நாமே அதிகப்படுத்தலாம். தொடங்குவதற்கு உதவ கிடைக்கும் சிறந்த உடற்பயிற்சி சாதனங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.

Flexnest Flexbike Exercise Cycle 

இந்த ஸ்மார்ட் பைக் அலாய் ஸ்டீலால் ஆனது. அதிகபட்சமாக 76 இன்ச் உயரம் கொண்டது. இந்த பைக் புளூடூத் மூலம் 1 மாத இலவச மெம்பர்ஷிப்புடன் ஆன்-டிமாண்ட் உடற்பயிற்சிகள், விர்ச்சுவல் ரைடுகள் கிடைக்கின்றன. ஸ்மார்ட் பைக்கில் 100+ எதிர்ப்பு நிலைகள் மற்றும் பெல்ட் டிரைவ் சிஸ்டம் போன்றவை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பைக் பேட்டரியில் இயங்குகிறது. Flexnest Flexbike உடற்பயிற்சி சைக்கிள் தற்போது 31 ஆயிரத்து 799 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Meditive Smart Jump Rope

இந்த ஸ்மார்ட்போன் புளூடூத் மற்றும் இலவச SkipJoy செயலி மூலம் உங்கள் ஸ்மார்ட்போனுடன் இணைத்துக்கொள்ளலாம். இந்த எஃகு கயிறு PVC உறை மூலம் பாதுகாக்கப்படுகிறது. உங்கள் உயரத்திற்கு ஏற்ப விரைவாக சரிசெய்ய முடியும். பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் ஏற்றது. இது தற்போது 1,649 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Apple Watch SE (Gen-2)

இந்த ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் உங்கள் உடற்தகுதியைக் கண்காணிக்கவும் உங்கள் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் மற்றும் பாதுகாப்பாக இருக்கவும் உதவுகிறது. இது விபத்து கண்டறிதல், மயக்கம் கண்டறிதல், அவசரகால SOS மற்றும் பல போன்ற சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் பல அளவுகள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கிறது, டஜன் கணக்கான பட்டைகள் மற்றும் 50 மீட்டர் ஆழம் வரை நீர் எதிர்ப்பு உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் தற்போது 29 ஆயிரத்து 400 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

Hoffen Weighing Scale

இந்த எடையை அளக்கும் இயந்திரம் 280×280 மில்லி மீட்டர் டெம்பர்டு கிளாஸ் மற்றும் 180 கிலோ வரை எடையை தாங்கும். துல்லியமான ஸ்ட்ரெய்ன் கேஜ் சென்சார் அமைப்புடன் இந்த இயந்திரம் செயல்படுகிறது.  இந்த எடையை அளக்கும் இயந்திரம் தற்போது 649 ரூபாய்க்கு கிடைக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.