வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கலிபோர்னியா : ‛‛ எக்ஸ் வலைதளம் மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானம் போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் ” என அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும், கடந்த அக்.,7ம் தேதி முதல் மோதல் நடக்கிறது. இதில், இஸ்ரேலில் 1,400 பேரும், காசாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட, 11,500க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர். காசாவின் பல பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடத்திய இஸ்ரேல், தரைவழித் தாக்குதலை நடத்தி வந்தது.
காசாவில் ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டமைத்துள்ள சுரங்கப்பாதை வலையமைப்பை அழிக்கும் முயற்சியில் இஸ்ரேல் படைகள் ஈடுபட்டு வந்தன. காசாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில், இஸ்ரேல் படைகள் தொடர் சோதனையில் ஈடுபட்டன. இப்போரில் ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் கொல்லப்பட்டுள்ளனர். காசா மக்கள் உணவு, தண்ணீர் இன்றி அவதியுற்று வருகின்றனர்.
இந்நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், “எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானமும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” ” எனத் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement