திருச்சி: திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவில் ராஜகோபுரம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர் கள் நேரு, சேகர்பாபு பங்கேற்று அடிக்கல் நாட்டினர். திருச்சி மாவட்டம் திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 4-வது திவ்ய தேசம் ஆகும். கோட்டை போல் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில் பெரிய பிரகாரத்தின் தென்பகுதியில் உள்ள கல் அறைகளில் ஒலி எழுப்பினால் எதிரொலி தெளிவாக கேட்கும். உய்யக்கொண்டார் எங்களாழ்வானின் அவதாரத் […]
