வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: அரசியலமைப்பு மற்றும் தேசிய சட்ட தினத்தன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த, 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது.இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட தினமான, நவம்பர் 26, அரசியலமைப்பு தினம் அல்லது தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் இந்திய அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது.
இதை கொண்டாடும் வகையில் உச்சநீதிமன்றத்தில் 7 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட அம்பேத்கர் சிலை நிறுவப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement