இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் பெப்ரவாரி மாதம் 2ஆம் திதி வரை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சமன்ப்ரிய ஹேரத் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தரர்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்..
க.பொ.த சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளுக்கு முகங்கொடுக்கும் மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி பாடநெறிகள் பல ஆரம்பிக்கப்படும். தேசிய கல்வி நிறுவனம், தொழிற்பயிற்சி அதிகார சபை மற்றும் திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றினூடாக இந்த பாடநெறிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, இம்முறை க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் 237,000 மாணவர்களுக்கும், எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அந்த முதலாவது தொழிற்பயிற்சி பாடநெறி ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பரீட்சை முடிவடைந்நதும், அந்த பாடநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட உள்ளன. ஆங்கில மொழி மற்றும் தொழிநுட்பத்திற்கு மேலதிகமாக தாம் விரும்பும் 2 தொழில்நுட்ப பாடங்களை தெரிவு செய்ய முடியும். முhணவர்கள், உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பெறும் வரை 4 மாதங்கள் இந்த பாடநெறியை கற்க முடியும். பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களை தெரிவு செய்த பின்னர் ஏனைய மாணவர்களை பரீட்சை ஒன்றின் ஊடாக தகுதியான பாடநெறிகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
மாணவர்களுக்கு பொருத்தமான தொழிலுக்கு ஏற்ற பாடநெறிகளே வழங்கப்படும். இலத்திரணியல் துறையாயின் அத்துறையில், உயர் தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியான பின்னர், பல்கலைக்கழகம் செல்லாத மாணவர்களுக்கு அவர்களுக்கான பாடத் தெரிவை மேற்கொள்ள முடியும். குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாணவர் உதவித் தொகைகளும் வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் மேலும் சுட்டிகடகாட்டினார்.