தீய சக்திகளை அழித்து நன்மைகளைக் காப்பவர் சபரிமலை ஸ்ரீஐயப்பன். ஹரிஹர சுதனாக அவதரித்த ஸ்ரீமணிகண்டன் அன்றிலிருந்து இன்று வரை கலியுகத் தெய்வமாய், கற்பக விருட்சமாய், கரம் குவிப்போர்க்கு காவலனாய், கானக வாசனாய் இருந்து ரட்சிப்பவர்.தன்னை தரிசிப்பவர்களின் குற்றம் குறைகளை மன்னித்து, ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அருளி வருகிறார் ஐயப்பன். தன் பக்தர்களையும் ‘சாமி’யாக்கிவிடும் அருள் வள்ளல் ஐயப்பன். ஐயப்பனை மனம் உருகி வழிபடும் எவர் வீட்டிலும் தரித்திரம் அண்டுவதில்லை. அகால துன்பங்கள் அணுகுவதில்லை. தோஷ-சாபங்கள் உண்டாவதில்லை என்பதே உண்மை.

ஐயப்பனை ஆராதிக்கும் விசேஷ காலங்கள் கார்த்திகை, மார்கழி மற்றும் தை என்கின்றன சாஸ்திரங்கள். எங்கு பார்த்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களை தரிசிக்க முடியும் என்பது கார்த்திகை மாதத்தின் சிறப்பு. ஐயப்பனை எண்ணி மாலையிட்டு விரதம் இருப்பவர்களை ‘கன்னிசாமி, சாமி, ஐயப்பா, மணிகண்டசாமி, மாளிகைபுரம், குருசாமி,’ என்றெல்லாம் தெய்வ வடிவாகவே காண்பது நம் வழக்கம். கார்த்திகை தொடங்கி தை மாதம் வரை இந்தியாவெங்கிலும் பல லட்சம் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து மண்டல, மகர ஜோதி பூஜைகளில் கலந்து கொள்வது வழக்கம்.
சபரிமலையில் மட்டுமில்லை. இந்த வேளையில் இந்த இந்தியா எங்குமுள்ள ஐயப்ப கோயில்களில் விசேஷ ஆராதனைகள், பூஜைகள் நடப்பது வழக்கம். அந்த வகையில் வரும் டிசம்பர் 2-ம் நாள் (சனிக்கிழமை) தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ரோட்டில் உள்ள மங்களபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள ‘அருள்மிகு சுந்தர விநாயகர் – ஸ்ரீதர்ம சாஸ்தா’ ஆலயத்தில் மிகச் சிறப்பான ஐயப்ப ஆராதனை விழா நடைபெற உள்ளன. இதில் அற்புதமான அத்தி மர ஐயப்பன் காட்சி அருள உள்ளார். அன்றைய அதிகாலை 6 மணி தொடங்கி இரவு 9 மணி வரை சிறப்பு வைபோகங்கள்-விசேஷ யாகங்கள் நடைபெற உள்ளன.

சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசிக்க இயலாத அன்பர்களுக்காக அதே போன்ற ஆராதனைகளை தஞ்சையில் நடைபெற உள்ளன. இந்த அற்புத ஆராதனையில் காலையில் ஸ்ரீமஹா கணபதி ஹோமம், ஸ்ரீசர்ப்ப பூஜை, ஸ்ரீஹரிஹர ஐயனார் பூஜை, நெய் அபிஷேகம், களபாபிஷேகம், உச்சிகால பூஜை, ஸ்ரீசண்டிகா தேவி ஹோமம், ஸ்ரீஉமா மாகேஸ்வர பூஜை, ஸ்ரீவிஷ்ணு பூஜை, 1008 தாமரை மலர்களால் ஐயப்பனுக்கு அர்ச்சனை, 108 நீராஞ்சனம், பகவதி பூஜை, படி பூஜை, ஹரிவராசனம், அருள்பிரசாதம் வழங்குதல் என விரிவான பிரமாண்ட பூஜைகள் நடைபெற உள்ளன. இதில் நீங்களும் கலந்துகொண்டு சங்கல்பிக்கலாம் என்பதும் ஒரு விசேஷம்.
ஆண்டுக்கு ஒருமுறையே வழிபடப்படும் சிறப்பு வாய்ந்த அத்தி மர ஐயப்பனை, மகாகுருசாமி, நடிகர் நம்பியார் சுவாமிகள் பல ஆண்டுகள் வைத்து ஆராதித்த 18 படியில் வைத்து, படி பூஜை நடத்தப்படவுள்ளது. மேலும் இங்கு மட்டுமே விசேஷமாக நடைபெறும் ‘நூறும் பாலும்’ என்ற சர்ப்ப தோஷ வழிபாடு சிறப்பானது. இந்த வழிபட்டால் நாக தோஷம் விலகி விரும்பிய வரன் கிடைக்கும். மேலும் ஸ்ரீஐயப்பனுக்கு 1008 தாமரை மலர் அர்ச்சனை. 108 தேங்காய் உடைத்து நீராஞ்சனம் போன்றவையும் நடைபெறும்.
சக்தி விகடன் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் நலத்துக்காகவும் வளத்துக்காகவும் நடைபெற உள்ள இந்த விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுமென கோயில் நிர்வாகத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக நடைபெறும் இந்த ஆராதனையில் கலந்து கொள்வதால் சுகமான வாழ்வும் சௌபாக்கிய நலமும் கிட்டும். நாக தோஷங்கள் உள்ளிட்ட கலியுக தோஷங்கள் அத்தனையுமே நீங்கும் என்பது உறுதி. திருமண யோகம், புத்திர பாக்கியம், வியாபார விருத்தி, தொழில் அபிவிருத்தி, அதிர்ஷ்ட வாய்ப்புகள், வெளிநாட்டு பயணங்கள் நலமாக அமையும். நோய்களுக்கான நிவர்த்தி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட சகல மேன்மைகளை உங்களுக்கு உண்டாகும்.
அரிதினும் அரிதான இந்த ஐயப்ப வைபோகத்தில் நீங்களும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற நேரடியாக கலந்துகொண்டு சங்கல்பித்துக் கொள்ளுங்கள்.