ஐதராபாத்: சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள தெலங்கானா மாநிலத்தில், இன்று அதிகாலை நடத்தப்பட்ட வாகன சோதனையின்போது, கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.5 கோடி என கூறப்படுகிறது. இதுவரை ரூ.650 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று அதிகாலை ரங்காரெட்டி பகுதியில் கச்சிபௌலி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஒரு காரில் இருந்து கணக்கில் வராத 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரூ.500 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக்கட்டுக்காக பறிமுதல் செய்யப்பட்டன. […]
