பட்டையை கிளப்பும் Black Friday விற்பனைகள்… எந்தெந்த தளத்தில் எவ்வளவு தள்ளுபடி?

Black Friday Sales 2023: இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள், பேஷன் நிறுவனங்கள் உள்ளிட்டவை பண்டிகை காலங்களின் தங்களின் விற்பனை பொருள்களுக்கும், தயாரிப்புகளுக்கும் பல்வேறு தள்ளுபடிகளை அள்ளி வீசுவார்கள். அந்த வகையில் அமேசானின் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் பண்டிகை விற்பனை, பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே விற்பனை உள்ளிட்டவை சமீபத்தில் நடைபெற்றது.  

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாத இறுதிக்குள், பெரிய பிராண்டுகள் ஒன்றுக்கொன்று போட்டியிட்டு, மேற்கத்திய நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு முன்னதாக, Thankgiving நிகழ்வையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சில சிறந்த தள்ளுபடிகளை வழங்குகின்றன. இது சமீப காலங்களில், Black Friday விற்பனை மற்றும் தள்ளுபடி சலுகைகள் இந்தியாவில் வருடாந்தர வழக்கமாக மாறிவிட்டது. 

ஏனெனில் சில்லறை விற்பனையாளர்கள் ஆண்டு இறுதி மற்றும் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் காலத்தின் ஆரம்ப தொடக்கத்திற்கு தயாராவார்கள். மேலும், ஆண்டு இறுதிக்கு முன்னதாக ஆன்லைன் மற்றும் சில்லறை விற்பனையை அதிகரிக்க லாபகரமான தள்ளுபடிகள் உள்ளன.

அடிடாஸ்

ஜெர்மன் தடகள ஆடை மற்றும் பாதணிகள் நிறுவனமான அடிடாஸ் (Adidas) அதன் Black Friday விற்பனை நாட்களை நவம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை அறிவித்துள்ளது. இது அனைத்து வாங்குதல்களுக்கும் கிட்டத்தட்ட 60 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு, சுமார் 20 சதவீத கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

குரோமா

இந்தியாவில் மூன்றாவது பெரிய மின்னணு உபகரண விற்பனையாளர் குரோமா (Croma). இந்நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், ஸ்மார்ட் டிவிகள், ஏசிக்கள், கேமராக்கள், வாட்டர் ஹீட்டர்கள், வாஷிங் மிஷின்கள், வாக்யூம் கிளீனர்கள் மற்றும் பாத்திரம் கழுவ பயன்படும் டிஷ்வாஸ்சர் போன்ற தயாரிப்புகளுக்கு நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 26ஆம் தேதி வரை தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது. ஆன்லைனிலோ அல்லது அருகில் உள்ள கடைகளுக்கு நேரிலோ சென்று சலுகைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

அமேசான்

உலகளவில் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் (Amazon), இந்த ஆண்டு Black Friday விற்பனையின் போது அதிகம் பயன்படுத்தக்கூடிய அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தாதாரர்களுக்கு பிரத்தியேகமாக சலுகைகளை வழங்குகிறது. சில வகை தயாரிப்புகளுக்கு ஒரே நாளில் இலவச டெலிவரி, திட்டமிடப்பட்ட ஷிப்பிங் தேதிகள், பிற பிரைம் உறுப்பினர்களுக்கு பரிசுகளையும் வழங்குகின்றன. 

அஜியோ

ஸ்டெல்லா மெக்கார்ட்னி,  மைக்கேல் கோர்ஸ், கோச் போன்ற உலகளாவிய பிராண்டுகளுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், காலணிகள் உள்ளிட்ட பேஷன் பொருள்களை விற்பனை செய்வதில் அஜியோ (Ajio) எப்போதும் முன்னிலை வகிக்கிறது. அஜியோவில் நவ. 24ஆம் தேதி முதல் நவம்பர் 27ஆம் தேதி வரை சில தயாரிப்புகளுக்கு 50 சதவீத தள்ளுபடியுடன் சில சலுகைகளுடன் விற்பனை தொடங்கும்.

பிளிப்கார்ட்

ஆன்லைன் விற்பனை தளத்தில் பிளிப்கார்ட் இரண்டாவது இடத்தில் உள்ளது. பிளிப்கார்ட் நவம்பர் 24ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி வரை ஒரு வாரம் முழுவதும் Black Friday விற்பனையை வழங்குகிறது. சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி ஆகியவற்றில் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதன் மூலம் வாங்குபவர்கள் பெரும்பாலான வகைகளில் தள்ளுபடிகளைப் பெறலாம். 

விஜய் சேல்ஸ் 

விஜய் சேல்ஸ் ஸ்டோர்களிலும் நவ. 24ஆம் தேதி முதல் நவ. 26ஆம் தேதி வரை Black Friday விற்பனை நடைபெறுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.