Citroen C3 Aircross – சிட்ரோன் கார் வாங்கினால் ஒரு வருடத்துக்கு இலவச பெட்ரோல் சலுகை

சிட்ரோன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டு வருட நிறைவை கொண்டாடும் வகையில் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காருக்கு 5 வருடம் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் சர்வீஸ் உட்பட கூடுதலாக ஒரு வருடத்திற்கான இலவச பெட்ரோல் சலுகை ஆனது ஒட்டுமொத்தமாக ரூ.1.50 லட்சம் வரையில் தள்ளுபடியை டிசம்பர் 31, 2023 வரை அறிவித்துள்ளது.

சமீபத்தில் விற்பனைக்கு வந்த 5+2 இருக்கை அமைப்பினை பெற்ற சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி விலை அறிமுக சலுகையாக ரூ.9.99 லட்சம் முதல் ரூ.12.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Citroen Year-end offers

சமீபத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை சலுகைகளை அறிவித்திருந்த சிட்ரோன் தற்பொழுது 2023 ஆம் ஆண்டின் இறுதி கொண்டாட்டத்தை அறிவித்துள்ளது.

சிட்ரோயன் சி3 ஹேட்ச்பேக் ரக மாடலுக்கு ரூ.99,000 வரை சலுகை அல்லது சலுகையில் மூன்று ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆக மொத்தம் 5 ஆண்டுளுக்கு வாரண்டி, ஐந்தாண்டுகளுக்கான சர்வீஸ் ஆகியவற்றுடன் ஒரு வருட காலத்திற்கு இலவச பெட்ரோல் வழங்குகிறது. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம் ஆக மொத்தமாக  ரூ.99,000 வரை பெறலாம்.

அடுத்து, சிட்ரோயன் C3 ஏர்கிராஸ் மாடலுக்கு ரூ.1,50,000 வரை சலுகை அல்லது சலுகையில் மூன்று ஆண்டுகளுக்கு இலவச நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆக மொத்தம் 5 ஆண்டுளுக்கு வாரண்டி, ஐந்தாண்டுகளுக்கான சர்வீஸ் ஆகியவற்றுடன் ஒரு வருட காலத்திற்கு இலவச பெட்ரோல் வழங்குகிறது. இந்த இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம் ஆக மொத்தமாக  ரூ.1,50,000 வரை பெறலாம்.

மேலே, வழங்கப்பட்டுள்ள சலுகை 31 டிசம்பர் 2023 வரை டெலிவரி பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

citroen c3 aircross suv rear

கூடுதலாக, விற்பனையில் உள்ள சி5 ஏர்கிராஸ் காரின் 2022 ஆம் ஆண்டு தயாரிப்பு மாடலுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி 2023 நவம்பர் 30 வரை கிடைக்கின்றது.

மேலே வழங்கப்பட்டுள்ள சலுகை விபரம் வேரியண்ட் உட்பட பல்வேறு காரணிகளை கொண்டுள்ளதால் அருகாமையில் உள்ள டீலரை அனுகலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.