வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சீனாவில் எச்9என்2(ஏவியன் இன்ப்ளூயன்சா வைரஸ்) பரவல் மற்றும் குழந்தைகளின் சுவாச பிரச்னை தொடர்பாக நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு குறைவாக தான் இருக்கும் எனக்கூறியுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தற்போதுள்ள சூழலில் எழும் பிரச்னைகளை சமாளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. எச்9என்2 வைரஸ் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, அது தொடர்பான முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த வைரஸ் மனிதரிடம் இருந்து மனிதருக்கு பரவும் வாய்ப்பு குறைவு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement