பெங்களூரு : பெங்களூரு நகர ம.ஜ.த., தலைவர் ரமேஷ் கூறியதாவது:
காங்கிரஸ் ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததால், குமாரசாமியை அவமதித்து, ம.ஜ.த., அலுவலகம் வளாகத்தில் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தனிப்பட்ட முறையில், அவரை திட்டியுள்ளனர். இத்தகைய செயல் குறித்து, ஸ்ரீராமபுரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
ம.ஜ.த., தலைவர்களை, மனோகர் என்பவர் அவமதிப்பாக பேசியுள்ளார். ‘போஸ்டரை ஓட்டியது நானே’ என பகிரங்கமாக கூறியுள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் உள்துறை அமைச்சர் அலுவலகம் முன் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement