மன்னிப்பு கேட்க முடியாது: குஷ்பு

சென்னையில் உள்ள நடிகை குஷ்பு வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ள நிலையில் நான் தவறாக பேசவில்லை, மன்னிப்பு கேட்க முடியாது என குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டினப்பாக்கம் லீத் கேஸ்டில் வடக்கு தெருவில் நடிகை குஷ்பு வசித்து வருகிறார். தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ள இவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு பதிவில் ‛சேரி' என பதிவிட்டார்.

இது சமூக வலைதளத்தில் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. மேலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்' என காங்கிரஸ் எஸ்.சி. -எஸ்.டி. பிரிவினர் அறிவித்தனர். இதையடுத்து குஷ்பு வசிக்கும் வீட்டிற்கு இன்ஸ்பெக்டர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது: குஷ்பு
சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று கூறியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது. நான் தகாத வார்த்தையை பயன்படுத்தவில்லை. அரசு கோப்புகளில் சேரி என்ற வார்த்தை உள்ளது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பவை என்ன என தெரிவித்துள்ளார் குஷ்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.