
'மான்குர்த்' படத்தில் மும்பை அரசியல்
மும்பை அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகும் படம் 'மான்குர்த்'. இதனை அன்ச்செயின்ட் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. பிரவீன் கிரி இயக்குகிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் 'மேதகு' புகழ் ராஜா, சௌந்தர்யா மனோகரன், சையத் பாஷா மற்றும் அல்கா சக்சேனா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ், இந்தி, மராத்தி போன்ற பல்வேறு மொழியினர் நடித்துள்ளனர். ஹரிஷ் ராஹித்யா இசையமைத்துள்ளார், விஷ்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். சுயாதீன படமாக உருவாகி உள்ள இந்த படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பின்னர் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் பிரவீன் கிரி கூறும்போது, “இந்த படத்தின் கதை களம் மும்பை. மும்பையின் பரபரப்பான வீதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மதங்களை தாண்டிய மனிதநேயத்தை பேசும் இந்த படம் திறமையான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பங்களிப்போடு சுயாதீன திரைப்படமாக தயாராகியுள்ள 'மான்குர்த்', உலகெங்கும் நடைபெற்று வரும் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது” என்றார்.