
10 நாட்களில் உலகளவில் ரூ.400 கோடி வசூலை எட்டிய டைகர் 3
'டைகர்' படத்தின் முதல் இரண்டு பாகங்களின் வெற்றியைத் தொடர்ந்து சல்மான் கான், கத்ரீனா கைப், இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் இணைந்து நடித்த 'டைகர்' மூன்றாம் பாகம் சமீபத்தில் வெளியானது. மனிஷ் சர்மா இயக்கிய இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக கோடிகளை குவிக்கிறது. டைகர் 3 வெளியாகி பத்து நாட்கள் கடந்த நிலையில் இப்போது ரூ.400.5 கோடி வசூலைக் எட்டியது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், தீபாவளிக்கு இதுவரை வெளிவந்த ஹிந்தி படங்களில் வசூல் ரீதியாக டைகர் 3 புதிய சாதனை நிகழ்த்தியதாக குறிப்பிட்டுள்ளனர்.