கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
தீவிபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
தீவிபத்து ஏற்பட்ட போது 50 க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் வந்து சிக்கியிருந்தவர்களை மீட்டதுடன், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement