நியூயார்க்: பிளாக்பிரைடே தினத்தில் அமெரிக்க அதிபர் டெமாக்கரஸி அவேகனிங் என்ற புத்தகத்தை வாங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநில தீவான நான்டுகெட் பகுதியில், தன் குடும்பத்தினருடன் டேவிட் ரூபன்ஸ்டீன் என்பவருக்கு சொந்தமான வீட்டில், விடுமுறையை கொண்டாடி வருகிறார். கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக குடும்பத்தினருடன் சாலைகளில் உள்ள அங்காடிகளில் பொருட்கள் வாங்க வந்தார்.
கருப்பு வெள்ளிக்காக கடைகளில் பொருட்கள் வாங்க சென்ற பைடன், ஹீதர் காக்ஸ் ரிச்சர்ட்ஸன் எனும் பெண் வரலாற்று ஆசிரியர் எழுதிய “ஜனநாயகத்தின்
விழிப்பு” எனும் பொருள்படும் “டெமாக்ரஸி அவேகனிங்” புத்தகத்தை வாங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது: “எங்கள் குடும்ப வழக்கம் இது. கருப்பு தின கொண்டாட்டத்தின் போது ஒரு புத்தக கடைக்காவது சென்று புத்தகம் வாங்குவது எங்கள் குடும்ப வழக்கம்” என பைடன் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் 4-வது வியாழக்கிழமை, “தேங்க்ஸ் கிவிங் டே” என கொண்டாடப்படுகிறது. நன்றி தெரிவிக்கும் நாள் என அங்கு கொண்டாடப்படும் இந்நாளில் அமெரிக்காவில் குடும்பங்கள் ஒன்று கூடி, ஒருவருக்கொருவர் நன்றி கூறி, விருந்துண்டு, விளையாடி, மகிழ்ச்சியாக இருப்பது வழக்கம்.
இதற்கு அடுத்த நாள் “ப்ளாக் ஃபிரை டே” எனப்படும் கருப்பு வெள்ளிக்கிழமை எனும் பெயரில்
கொண்டாடப்படும் இந்நாள், டிசம்பர் மாத இறுதியில் வரும் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கான பொருட்கள் வாங்க தொடங்கும் தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, கடைகளில் பல்வேறு பொருட்களை வாங்க கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக, வர்த்தகர்கள் அதிக தள்ளுபடி வழங்குவதும், பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஷாம்பெயின் உள்ளிட்ட பல பரிசு பொருட்களை அளிப்பதும் வழக்கம்.
இந்த வியாபார கொண்டாட்டம் ஆண்டு இறுதி வரை நடந்து, பின் புது வருட கொண்டாட்டங்களுக்கு பிறகு நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது
அமேசான் போன்ற ஆன்லைன் வியாபார வலைதளங்களும் பிளாக்பிரை டே தினத்திற்கு சிறப்புதள்ளுபடிகளை சலுகைகளாக அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்